Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நினைவோ ஒரு பறவை..'; பிரியாவிடை பெற்ற ஜானகி.. அரசு மரியாதையுடன் தகனம்

12 ஜூலை, 2026 - 05:49 IST
எழுத்தின் அளவு:
Janaki-bids-farewell..-cremated-with-state-honors
Advertisement


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் 1938ம் ஆண்டு பிறந்து, 3 வயதில் இசை கற்க ஆரம்பித்து, மேடை நிகழ்ச்சி முதல் திரைப்பட பாடகியாக உருவெடுத்தவர் எஸ்.ஜானகி. 17 மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடி சாதித்துள்ள ஜானகி, நேற்று வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

ஜானகியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இந்திய திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். மைசூரு மகாராஜா திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், மைசூரில் உள்ள எச்.டி. கோட்டை சாலையில் அமைந்துள்ள கனியனஹுண்டியில் உள்ள நவீன் பண்ணை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு ஜானகியின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்குகள் செய்தனர். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவின்பேரில், 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் கர்நாடக அமைச்சர், கர்நாடக நடிகை பாரதி, பாடகர்கள் மனோ, சுஜாதா மோகன், விஜய் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ரசிகர்கள், பொதுமக்கள், கண்ணீருடன் ஜானகியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ. 1.80 கோடி நிலுவைத் தொகை: நடிகர் ஆர்யா மீது ஹைதராபாத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!ரூ. 1.80 கோடி நிலுவைத் தொகை: நடிகர் ஆர்யா ... 9 நாளில் 'கட்டாகுஸ்தி -2'  வசூல் எவ்வளவு? 9 நாளில் 'கட்டாகுஸ்தி -2' வசூல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap