பிளாஷ்பேக் : சினிமா ரகசியங்களை உடைத்த 'சர்வர் சுந்தரம்' | கால்களில் 8 கிலோ சலங்கையை கட்டிக் கொண்டு நடனப் பயிற்சி செய்த ஸ்ரத்தா கபூர் | தயாரிப்பாளரின் டேப் ரெக்கார்டரை விற்று சம்பள பாக்கியை எடுத்துக் கொண்ட அக் ஷய் குமார் | அஜித், நயன்தாரா குறித்து கடுமையாக விமர்சித்த திருப்பூர் சுப்பிரமணியம் | நவம்பர் 27 வெளியீடுகள் : அறிவிக்கப்பட்டவை 13, வெளியாவது 9 | தமிழ் சினிமாவில் உழைப்பால் உச்சம் தொட்ட வாரிசு நட்சத்திரங்கள் | காட்பாதர் படம் பார்த்துவிட்டு முகேஷை டென்சனாக்கிய மணிரத்னம் : உண்மையை உடைத்த சுகாசினி | 12 வருடங்களுக்கு பிறகு உருவான நாங்கேலி இசை ஆல்பத்தில் நடித்த நிகிலா விமல் | கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 2 மாதம் பயிற்சி எடுக்கும் அமீர்கான் | ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கு : டிச., 3ல் கெனிஷா ஆஜராக உத்தரவு |

சசிகுமார் நடித்துள்ள வெப் சீரிஸ் 'வதந்தி 2 '. ஆணட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் - காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். சசிகுமார் கதை நாயகனாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன், நந்தகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் ப்ரைம் வீடியோ தளத்தில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் கிரைம் திரில்லர் ஜார்னரில் உருவாகி உள்ளது. இதில் சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியில் இது உருவாகியுள்ளது.
நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, 'மணி' என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை.




