ஷாருக்கானால் வெளியான படம் : லாபம் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு | பிரளய் படத்திற்காக ஓணம் கொண்டாட்டத்தை தியாகம் செய்த கல்யாணி பிரியதர்ஷன் | குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வெளியூர் கிளம்பிய நாகார்ஜுனா | 32 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் தென்மாவின் கொம்பத்து | அம்மாவிடம் திரும்பப் போவதில்லை : பார்வதி திட்டவட்டம் | இத்தனை கோடி நஷ்டத்தைத் தாங்குமா தயாரிப்பு நிறுவனம் ? | திரையுலகில் 25வது ஆண்டு : தேசிய விருது வாங்கியே தீருவேன் என்கிறார் கருணாஸ் | படம் ஓடாவிட்டால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடிப்பேன்: தெலுங்கு நடிகை சவால் | பிளாஷ்பேக் : ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்ட 'பொம்மை' கதை | பிளாஷ்பேக் : கவனிக்கப்படாமல் போன 'சம்பூர்ண மகாபாரதம்' |

ஒவ்வொருவரது பள்ளி நாட்களும், கல்லூரி நாட்களும் மறக்க முடியாதவை. அதிலும் பள்ளி நாட்கள் என்ற சிறு வயதுப் பருவம் எந்த ஒரு கவலையும் இல்லாத நாட்களாக அனைவருக்குமே இருக்கும். 80களுக்கு முன்பு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அவர்களது நண்பர்களைத் தொடர்பில் வைத்திருந்தது குறைவாகவே இருக்கும்.
90களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மொபைல் போன், சமூக வலைத்தளங்கள், வாட்சப் என வந்துவிட்டதால் ஒரு நண்பரைக் கூட விடாமல் இன்றும் தொடர்பில் வைத்திருக்கும் வசதி வந்துள்ளது.
பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள், தங்களது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும் நாட்கள் என இன்றும் பலரது ரியூனியன் பற்றி பார்க்கும் போது நமக்குள்ளும் ஒரு ஆசை வரும்.
கொடைக்கானலில் உள்ள ஒரு கான்வென்ட்டில் படித்த நடிகர், இயக்குனர் சசிகுமார் அவரது பள்ளிக்கு ஒரு விசிட் அடித்துள்ளார். அந்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், மாணவிகள் என அனைவருடனும் அவர் பேசியது வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
“மீண்டும் என் கல்விக் கூடத்திற்கு…. கனவுகள் உருவான, நட்புகள் மலர்ந்த மற்றும் நினைவுகள் என்றென்றும் பதியப்பட்ட அந்த இடத்திற்குத் திரும்பியுள்ளேன்” என இது குறித்து பதிவிட்டுள்ளார் சசிகுமார்.




