திரைப்படங்களில் ‛கஞ்சா' பயன்படுத்தும் காட்சி இருக்க கூடாது : ஜிவி பிரகாஷ் | ‛திரிஷ்யம் 3' ஹிந்தி அக்., 2ல் ரிலீஸ் | டாக்சிக் எனக்கு புதிய பாதையை அமைக்கும் : யஷ் நம்பிக்கை | தஞ்சையில் துவங்கிய ஜி.வி.பிரகாஷின் ‛நிஞ்சா' படப்பிடிப்பு | மூன்றே நாளில் 80 கோடி கடந்த 'இருமுடி' | ‛தி டார்க் ஹெவன்' படம் செப்., 18ல் ரிலீஸ் | அடுத்தாண்டு ஜன., 8ல் ‛மகாகாளி' ரிலீஸ் | சினிமாவில் கேரக்டரின் வெற்றிக்காக கெட்டப்பை மாற்ற அதிகம் மெனகெட்ட தமிழ் நடிகர், நடிகைகள் | ஹிந்தி தெரிந்தால் சினிமா வாய்ப்புகள் வரும் : வர்ஷினி | திரிஷ்யம் 4ம் பாகம் : தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி |

திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பது தான் எனது விருப்பமும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார்.
முருகு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமான நிஞ்சா, தஞ்சாவூரில் இன்று துவங்கியது. நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். பட விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், ‛‛தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா படம் உருவாகி வருகிறது. இந்த கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது. காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் . குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகும். இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா' பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும் என தெரிவித்தார்.
முன்னதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.