முதல் பாடலிலேயே சாதனையை துவங்கிய தமிழ் சினிமாக்கள் | செல்ல நாயின் பின்னணியில் உருவாகும் முகேன் ராவ்வின் 'மைலோ' | சந்தானத்தின் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு : டிசம்பரில் ரிலீஸ் | சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார் | பிளாஷ்பேக் : கண்ணதாசனை கடனிலிருந்து மீட்ட தேவிகா | கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி? | புதியவர்களைத் தேடும் 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி | அமெரிக்காவில் ஸ்பெஷலாக நடந்த 'ராமாயணா' பிரஸ் ஷோ | 'டாக்சிக்' அடுத்து ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆகிறதா 'பௌசி'? | பிரபாஸ் பிறந்தநாளில் அடுத்தடுத்து வந்த படங்களின் அப்டேட்ஸ் |

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த ஆச்சி மனோரமா, 200 படங்களுக்கு மேல் சிவாஜியுடன் நடித்துள்ளார். 'பொம்பள சிவாஜி' என்ற பெயரையும் பெற்றார். காமெடி மற்றும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்த மனோரமோ சிவாஜி ஜோடியாக ஒரே ஒரு படத்தில் நடித்தார் அந்தப் படம் 'ஞான பறவை'.
வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில், 1991ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ஹரிஷ் குமார், சசிகலா இளம் நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். ராஜசேகர், வி. கே. ராமசாமி, காந்திமதி, ராஜிவ், சின்னி ஜெயந்த், சார்லீ, கே. எஸ். ரகுராம், சுதா, ப்ரியா, சுதா, தில்லை ராஜன், குமரன், சக்தி தாமு, முத்துக்குமார், டாக்டர் ராஜேந்திரன், பிரகாசம், மாஸ்டர் சரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.ஆர். தனபாலன் தயாரிக்க, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
ஒரே செல்ல மகளின் காதலும், தற்கொலையும் ஒரு முதிய தம்பதிகளை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அந்த முதிய கணவன், மனைவியாக சிவாஜி, மனோரமா நடித்திருந்தார்கள்.




