முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் | ஒரே வாரத்தில் இரண்டு படங்களில் பிரியங்கா மோகன் | 7 மில்லியன் லைக்குகளைப் பெற்ற தீபிகா படுகோனே 'பிரக்னன்சி போட்டோஸ்' | நிவேதிதா சதீஷ் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார் | 'வைல்ட் தமிழ்நாடு': வன ஆவணப் படம் வெளியானது | கருப்பட்டி: மனைவி கொலையை துப்பறியும் கணவனின் கதை | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் கிருஷ்ணன் - குசேலன் உறவு | பிளாஷ்பேக்: திருட்டு கதைக்கு 2 தேசிய விருது | முன்பதிவு : கடும் போட்டியில் கார்த்தி, சூரி படங்கள் |

கோபிசந்த் மாலினேனி இயக்கும் தனது 111வது படத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இதை முடித்ததும் கொரட்டலா சிவாவுடன் இணைந்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தயாரிப்பாளர்கள் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் ஒரு அதிரடியான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்காக ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஏற்கனவே 2024ல் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்து வெளியான சைந்தவ் என்ற படத்தில் இதுபோன்று ஒரு சிறப்பு கேரக்டரில் ஆர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கொரட்டலா சிவா.




