இளையராஜா, சரத்குமாரை சந்தித்த எழுத்தாளர் சங்கத்தினர் | ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் 'மகாராஜா' | ‛லீடர்ஷிப்' பற்றிய விமர்சனம் : விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி ஆதரவு | பிளாஷ்பேக்: இமேஜிற்கு பொருந்தாத கதை.. ஏமாற்றம் தந்த எம் ஜி ஆரின் “தாலி பாக்கியம்” | 20வது திருமணநாளில் மீண்டும் திருமணம் செய்த சூர்யா, ஜோதிகா : உறுதிமொழி அளித்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு | என் கதாபாத்திரத்தை கேட்டு அழுதேன்: 'என்ன விலை' படம் பற்றி நிமிஷா சஜயன் நெகிழ்ச்சி | டிஸ்கோ சாந்திக்கு என்னாச்சு? | ‛முருகா' அசோக் உடன் ஒரே படத்தில் அறிமுகமாகும் 3 ஹீரோயின்கள் | புதுமுகங்களின் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை | 'பீப்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம் |

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வந்த படம் டாக்சிக். எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. படத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரத்திற்கு ஏற்ப படம் இல்லாதததால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளில் தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான துரந்தர் பட புகழ் ஆதித்யா தர், யஷ்ஷிற்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது திரையுலகில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது, யஷ்ஷின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் விமர்சனங்களும் ட்ரோல்களும் குவிந்து வரும் வேளையில், ஹிந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் ஒருவர் பகிரங்கமாக யஷ்ஷிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொடக்கத்தில் யஷ்ஷின் டாக்சிக் படமும் ஆதித்யா தரின் துரந்தர்: தி ரிவெஞ்ச் படமும் ஒரே நேரத்தில் மோத திட்டமிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஆதித்யா தர் காட்டியுள்ள இந்த நட்பு ரீதியான சைகை மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.




