காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் | செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்" | விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” | ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் |

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியான பான் இந்தியா படம் 'டாக்ஸிக்'. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
அன்றைய தினம் வெளிநாடுகளில் ஆங்கில மொழியிலும் இப்படம் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த மொழி சார்ந்த வசூல் எவ்வளவு என்ற விவரம் வெளியாகவில்லை. அதே சமயம், படத்தின் ஒரிஜனல் நீளமான 3 மணி நேரம் 14 நிமிடத்திலிருந்து, 17 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 57 நிமிடங்கள் கொண்ட ஆங்கில பதிப்பு கடந்த வாரம் இந்தியாவில் சில குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்டது.
வெளியான அன்று இப்படம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் இணையதளங்கள் பக்கம் சென்று இன்றைய நிலவரம் பற்றிப் பார்த்தால் பெங்களூருவிலே கூட ஓரிரு காட்சிகள் மட்டுமே இருக்கிறது.
ஆங்கிலப் பதிப்பிற்காக தனி படமாக்கல், தனி டப்பிங் என அதற்காக உழைத்த உழைப்பு இப்படி வீணாகிப் போய்விட்டதே என சினிமாவின் தீவிர ரசிகர்கள் கவலையுடன் பகிர்ந்த பதிவுகளை சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.




