Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சி... : குஷ்புவின் டிசைனர் யார் தெரியுமா?

11 செப், 2026 - 01:12 IST
எழுத்தின் அளவு:
Jackpot-show-again...-Do-you-know-who-Khushbus-designer-is
Advertisement

ஜெயா டிவியில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி அந்த காலத்தில் பிரபலமாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஜாக்கெட் பெண்கள் மத்தியில் அப்போது டிரெண்ட்டாகவும், பேசு பொருளாகவும் இருந்தது. ஒவ்வொரு வார நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான மாடலில் அவர் ஜாக்கெட் அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். அவருக்குபின் ஜாக்பாட் நிகழ்ச்சியை சிம்ரன் கூட நடத்தினார். பின்னர், அது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்குபின் மீண்டும் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்துகிறார் குஷ்பு. வரும் செப்டம்பர் 13 முதல் ஞாயிறுதோறும் ஜாக்பாட் ஒளிபரப்பாகிறது. இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

ஜாக்பாட் நிகழ்ச்சி குறித்து குஷ்பு பேசுகையில், ‛‛மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மகிழ்ச்சி. என் உடை, பேச்சு, நிகழ்ச்சியில் வரும் கேள்விகள், பங்கு பெறும் அணிகள், சுவாரஸ்யங்களுக்காக அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர். உங்க நிகழ்ச்சி வந்துவிட்டால் எங்க வீட்டில் உரிய நேரத்தில் சாப்பாடு வராது என பலர் புகார் கூட சொல்லியிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை மீண்டும் பல புதுமைகளுடன் தொகுத்து வழங்குகிறேன்.
பிரபலங்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் இதில் பங்கு பெற்று 10 லட்சம் வரை பரிசுகளை வெல்லலாம். காலத்துக்கு ஏற்ப வாட்ஸ் ஆப் மூலமாகவும் கேள்விகள் கேட்கப்பட உள்ளது. உங்க ஜாக்கெட்டை யார் டிசைன் பண்ணுகிறார்கள் என என்னிடம் கேட்காதவர்கள் இல்லை, இந்தமுறை ஜாக்பாட் நிகழ்ச்சியில் வரும் என் ஜாக்கெட்டை நடிகை பூர்ணிமா பாக்யராஜ் டிசைன் செய்து கொடுக்கிறார். சினிமாவில் இருந்த நான் இந்த நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை வந்தேன், இன்னும் பிரபலம் ஆனேன். மீண்டும் கொஞ்சம் இடைவெளிக்குபின் சின்னத்திரை வந்துள்ளேன்'' என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் சின்னத்திரை நடிகர்புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் ... அன்றைய பதிவுக்கு பதிலடியா... : சூர்யா Vs சிவகார்த்திகேயன் அன்றைய பதிவுக்கு பதிலடியா... : சூர்யா Vs ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap