‛கிளாடியேட்டர்ஸ்' டிரைலர் வெளியீடு ; தோல்வியை பார்த்து அஜித் பயந்தது இல்லை : ஷாலினி | சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் | தெலுங்கு ரசிகர்களின் முதல் தேர்வாகத் தொடரும் சூரியின் மண்டாடி | சந்தீப் கிஷன் திறமை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை : ஜேசன் சஞ்சய் | கரீனா கபூர், பிருத்விராஜ் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் சுமாரான தொடக்கம் | நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில் | ஜெயிலர் 2வில் திலீப்பாக சுராஜ் வெஞ்சாரமூடு | பூரி ஜெகன்நாதர் கோயிலில் கிடைத்த சமுத்திரக்கனி படத்தலைப்பு | ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இன்னொரு படம் | எப்போதும் பரிதாபத்துக்குரியவர்கள்... என்ன செய்யலாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை? |

தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஆர்.எம்.வீரப்பனின் மகன் வி.தமிழழகன் இயக்கிய படம் 'நிலாப் பெண்ணே'. இப்படத்தில் திவ்ய பாரதி, ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். துணை வேடங்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜனகராஜ் ஆகியோர் நடித்தனர். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த இந்தப் படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். 1990ம் ஆண்டு வெளியானது.
இந்த படத்திற்கான கதையை எழுதிவிட்டு நாயகி தேடினார் தமிழழகன். அவர் மனதில் இருந்த தோற்றத்துடன் யாரும் அமையவில்லை. இதனால் படத்தின் ஆர்ட் டைரக்டர் பரணியிடம் தன் மனதில் உள்ள நாயகியின் தோற்றத்தை விவரித்தார். அதை அப்படியே ஓவியமாக வரைந்தார் பரணி.
அந்த ஓவியத்தை பத்திரிகையில் வெளியிட்டு 'இந்த தோற்றம் கொண்ட பெண் தேவை' என்று விளம்பரம் செய்தார். 120 பேர் விண்ணப்பித்தார்கள். அனைவரையும் அழைத்து பார்த்து அவர்களிலும் யாரும் தமிழழகனுக்கு திருப்திகரமாக அமையவில்லை.
அப்போது மும்பையை சேர்ந்த ஒரு பெண் உங்கள் ஓவியம் போல இருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே மும்பை சென்று அவரை சந்தித்தார். தோற்றம் சரியாக இருந்தாலும் சின்ன பெண்ணாக இருந்தார். இதனால் படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டு ஒரு வருடம் வரை காத்திருந்து அந்த பெண்ணை நடிக்க வைத்தார்.
அவர்தான் திவ்ய பாரதி. பின்னாளில் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து 19 வயதில் மாடியில் இருந்து விழுந்து இறந்து போனார்.




