Advertisement

சிறப்புச்செய்திகள்

'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்' இந்தியாவில் 26 கோடி வசூல்: உலகளவில் 5வது இடம் | பிளாஷ்பேக்: 'புறநானூறு' என்ற இலக்கியம் தந்த கரு. உருவானது “காதல் கோட்டை” | இளையராஜாவை ஏமாற்றினாரா கார்த்திக் சுப்பராஜ்? | திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு | 'வருஷம் 16' ராதிகா முதல் 'சின்னத்தம்பி' நந்தினி வரை: குஷ்பு நடித்த 'டாப் 10' படங்கள் | அக்டோபர் முதல் வாரத்தில் 5 படங்கள் ரிலீஸ் | மைசூரில் தர்மன் படப்பிடிப்பு : ராம் பொதினேனியும் இணைந்தார் | 10 மாடி கட்டடம், 30 கோடி செலவு : இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு | மறக்க முடியாத திரை பயணங்கள்... தமிழ் சினிமாவின் அடையாளங்கள் - அன்றும் இன்றும் | ஹிப்ஹாப் ஆதிக்கு முத்தம் கொடுத்த தேவா : ஏன் தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் மகள் என்பதால் யாரை பார்த்தும் வியப்படைவதில்லை : சவுந்தர்யா ரஜினிகாந்த்

26 செப், 2026 - 03:29 IST
எழுத்தின் அளவு:
Soundarya-Rajinikanth-Being-Rajinis-daughter-doesnt-surprise-anyone
Advertisement

சவுந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள படம் 'லவ்'. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படமாக உருவாகி உள்ளது.

படத்தின் அறிமுக விழா நடந்தது, இதில் சவுந்தர்யா ரஜினி பேசியதாவது: என்னை நம்பி இந்தக் கதையை வழங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் இந்த தொடருக்கான விவாதம் நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.

நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர்.

நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக் கொள்ளவும் கற்றுக் கொண்டேன்.

இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செஞ்சி அம்மனை பாடிய வைக்கம் விஜயலட்சுமிசெஞ்சி அம்மனை பாடிய வைக்கம் ... ஓடிடி ரிலீஸ் பிரச்னைக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை : அமைச்சர் ராஜ்மோகன் ஓடிடி ரிலீஸ் பிரச்னைக்கு முத்தரப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap