கர்நாடகா : செப்டம்பர் 30 முதல் சினிமா டிக்கெட் கட்டண உயர்வு | வெற்றிக்காக போராடுகிறார் ஹிப்ஹாப் ஆதி: நாளை நன்றி அறிவிப்பு விழா | ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரி சோதனை | பிளாஷ்பேக்: மேற்கத்திய பாணியில் வெளிவந்த இந்தியாவின் முதல் 'கவ்பாய்' திரைப்படம் | தமிழ் சினிமாவில் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம்: நடிகை ராதிகா கவுரவ தலைவர் ஆனார் | டோரதி : ஆன்லைன் விமர்சனங்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில் | 'ஜெயிலர் 2' பாடல்கள் நாளை மறுநாள் ரிலீஸ்: என்ன பேசப்போகிறார் ரஜினிகாந்த்? | தினேஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த காதலி !! | அக்டோபர் 1 - ஓடிடி தளத்தில் 'சர்தார் 2' ரிலீஸ் | ரூ.155 கோடி வசூலித்த 'தி பாரடைஸ்', ஆச்சரியத்தில் தெலுங்கு சினிமா |

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று(செப்., 26) நடந்தது. அதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ‛‛நம்முடைய துறையைப் பொறுத்த வரை எப்பவும் தனி கவனம் இருக்கும். உள்ளாட்சி கேளிக்கை வரி விலக்கு பற்றி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். இனி வருடந்தோறும் சினிமா விருதுகள் வழங்கப்படும். படப்பிடிப்பு நடத்த இனி யாரும் தலைமை செயலகம் வந்து நிற்கக்கூடாது, எல்லாம் நவீன மையமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டு அனுமதி கோரப்படும் பட்சத்தில் ஆட்டோமேட்டிக்காக அனுமதி பெறப்படும்.
ஓடிடி வெளியீடு கால இடைவெளி, பைரசி போன்றவைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பேசி வருகிறோம். இந்த விவரங்கள் பேசி முடிக்க முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம். தயவுசெய்து உங்கள் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்து வர வேண்டாம், உட்கார்ந்து பேசி தீர்ப்போம்'' என்றார்.