4வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி | சல்மான்கானின் பிக்பாஸ் 20 ஓடிடி-யில் சாதனை | பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மகேஷ் பாபுவின் வாரணாசி ராமர் வேடம் | நீண்ட இடைவெளிக்கு பிறகு உடற்பயிற்சிக்கு திரும்பிய ராஷ்மிகா | காலை 6 மணி காட்சிகள், சிறிய படங்களுக்கு ஆர்வம் காட்டாத தியேட்டர்கள், ரசிகர்கள் | நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணா நியமனம் | தமிழ் சினிமா - சின்னத்திரை இரண்டிலும் உச்சம் தொட்ட பிரபலங்கள் | இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ? | தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்த பிற மொழி டாப் ஹீரோக்கள் |

ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛மைசா'. முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 'மைசா' என்ற பழங்குடியினப் பெண்ணாக ராஷ்மிகா அதிரடி ஆக் ஷனில் நடித்துள்ளார். அநீதி, வன்முறை மற்றும் தனிப்பட்ட இழப்புகளால் பாதிக்கப்பட்ட சாதாரண பெண்ணாக இருந்து, தன் சமூகத்தையும் தனக்கு முக்கியமானவர்களையும் காப்பதற்காக ஆயுதம் ஏந்தும் போராளியாக மாறுவதே இவரது வேடமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இம்மாதம் நவ., 27ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛தொழில்நுட்ப ரீதியாக எந்த சமரசமும் இன்றி, திரையரங்குகளில் சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம். நவ., 27ல் மைசா படம் வெளிவராது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களது தொடர்ச்சியான அன்பு, பொறுமை மற்றும் ஆதரவிற்கு நன்றி. உங்களது காத்திருப்பு நீண்டகாலம் இருக்காது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது.




