4வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி | சல்மான்கானின் பிக்பாஸ் 20 ஓடிடி-யில் சாதனை | பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மகேஷ் பாபுவின் வாரணாசி ராமர் வேடம் | நீண்ட இடைவெளிக்கு பிறகு உடற்பயிற்சிக்கு திரும்பிய ராஷ்மிகா | காலை 6 மணி காட்சிகள், சிறிய படங்களுக்கு ஆர்வம் காட்டாத தியேட்டர்கள், ரசிகர்கள் | நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணா நியமனம் | தமிழ் சினிமா - சின்னத்திரை இரண்டிலும் உச்சம் தொட்ட பிரபலங்கள் | இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ? | தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்த பிற மொழி டாப் ஹீரோக்கள் |

மைசா என்ற ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட ஓய்விலிருந்த ராஷ்மிகா மந்தனா, தற்போது மெல்ல தனது உடற்பயிற்சி வழக்கத்திற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில்தான் அவர் தனது கணவர் விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது வீட்டாருடன் ஜப்பானுக்குச் சென்று மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு நாடு திரும்பினார். ரணபாலி படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, குடும்பத்தினர் அனைவரும் இந்த சுற்றுலாவிற்குச் சென்றிருந்தனர்.
இதற்கிடையில், நவம்பர் 27ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த மைசா படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், உடல் காயத்திலிருந்து மீண்டு வந்ததைத் தொடர்ந்து, மீண்டும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார் ராஷ்மிகா. தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை அவரது குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்களுடன், இது ராஷ்மிகாவின் குழு. வேலை முடிந்து நீங்கள் அவரது வீட்டிற்குச் சென்றால், அவர் இதைத்தான் செய்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள்- என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர். அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா.




