நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் பரியேறும் பெருமாள். எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, மாரிமுத்து நடித்திருந்தனர். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். ஜாதி கொடுமைகளை பற்றிய பேசிய படம். ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு வினாத்தாளில், பரியேறும் பெருமாள் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. "தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்" என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
இதற்கு 3 பதில்கள் கொடுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லி இருந்தார்கள். 1. இந்தப் படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டியது. 2. இந்த படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. 3. இப்படம் திரு.மாரி செல்வராஜால் இயக்ககப்பட்டு நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது.
இவ்வாறு அந்த கேள்வி, பதில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து மாரிசெல்வராஜ் தனது டுவிட்டரில் பரியேறும் பெருமாள் என்கின்ற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி; யாவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபக்கம் இருந்தாலும் அரசு நடத்தும் ஒரு தேர்வில் ஒரு படத்தை "தலைசிறந்த படைப்பு" என்று எந்த அடிப்படையில் குறிப்பிடப்பட்டது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.