கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத், எச்.வினோத், யுவன் சங்கர் ராஜா, போனிகபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை. அஜீத் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பேட்ட படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரோசி நாயகியாக நடிக்க, டோலிவுட் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.
இப்படம் தொடங்கி ஓராண்டுக்கு மேலாகி விட்டபோதும் இன்னும் படம் குறித்த ஒரு அப்டேட்டை கூட வெளியிட வில்லை. தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் வலிமை அப்டேட் ஏதாவது வெளியாகும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அஜீத்தின் ரசிகர்கள் நொந்து நூலாகி விட்டார்கள்.
இப்படியான நிலையில், வருகிற ஏப்ரல் 14-ந்தேதி அதாவது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வலிமை படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி யுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வலிமை படப்பிடிப்பு குஜராத்திலுள்ள பாவ்நகரில் விரைவில் தொடங்குகிறது. அங்கு 3 வாரங்கள் நடக்க உள்ளது. அதோடு வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.