சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
விஜய் நடித்த படம் ஒன்று ஹிந்தியில் முதல் முறையாக டப்பிங் ஆகி வெளியாவது இதுவே முதல் முறை. மற்ற மொழிகளில் ஜனவரி 13ம் தேதி வெளியான படம் ஹிந்தியில் ஜனவரி 14ம் தேதி வெளியானது.
வட இந்தியாவில் ஹிந்தியில் சுமார் 500 தியேட்டர்களில் 'மாஸ்டர்' வெளியானதாகச் சொன்னார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் கூட வசூலைப் பெற முடியாமல் படம் தடுமாறி உள்ளது. மொத்தமாக 2 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாகத்தான் வசூலித்துள்ளது என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் முதல் நாளில் வெளியான 'மாஸ்டர்' தமிழ், தெலுங்குக்கு கிடைத்த வரவேற்பை விட ஹிந்திக்கு குறைவாகவே கிடைத்துள்ளதாம். சரியான விளம்பரம், பிரமோஷன் செய்யாமல் படத்தை வெளியிட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
இருப்பினும் தெலுங்கு மாநிலங்களில் இப்படம் 'லாபக் கணக்கை' ஆரம்பித்துவிட்டது என்பது கொஞ்சம் ஆறுதல். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் விஜய் படங்களுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கும். அது தற்போது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவுக்கும் பரவியுள்ளது விஜய்க்கு அடுத்த படத்திற்கான சம்பளத்தை ஏற்க பேருதவி புரியும்.