அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
2020ம் ஆண்டு தென்னிந்திய அளவில் அதிக அளவில் பார்க்கப்பட்ட, கேட்கப்பட்ட பாடல் ஒரு தெலுங்குப் பாடல். 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடனமாடிய 'புட்ட பொம்மா' பாடிய பாடல் மொழி தெரியாத ரசிகர்களையும் கவர்ந்தது.
தன்னுடைய இடுப்பைச் சுழற்றி சுழற்றி அசைத்து நடனமாடிய பூஜா ஹெக்டேக்கு இந்த பூலோகத்தில் பலரும் அடிமையானர்கள். தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டேவை, விஜய்யின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
பூஜா ஹெக்டே முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானது தமிழ்ப் படத்தில் தான் என்பது பலருக்கும் மறந்து போயிருக்கும். மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளிவந்த 'முகமூடி' படம் தான் அவருடைய முதல் படம். அப்படத்தின் படு தோல்வி அவரை மீண்டும் இந்தப் பக்கம் வரும் ஆசையை அப்படியே நிறுத்திவிட்டது.
கஷ்டபப்பட்டு தெலுங்கு, ஹிந்தியில் முன்னேறி வருகிறார். நயன்தாராவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றிப் படத்தைக் கொடுத்த நெல்சன் இயக்கும் படம், அதிலும் விஜய் ஜோடி என்பதால் பூஜா மீண்டும் நடிக்க வரலாம் என்கிறார்கள். தெலுங்கில் 'மாஸ்டர்' படம் மூலமும் தனக்கு புதிய மார்க்கெட்டைப் பெற்றுள்ள விஜய்க்கு, பூஜா ஜோடியாக நடித்தால் அங்கும் உதவியாக இருக்கும். சம்மதிப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.