ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் ஜனவரி 13ம் தேதி வெளியானது.
படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் 25 கோடி என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன்பின் வசூல் விவரங்களை வெளியிடவில்லை. வினியோக வட்டாரங்களில் விசாரித்ததில் மூன்று நாட்களில் 100 கோடி வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அது உலக அளவிலான வசூல். தமிழ்நாட்டில் மட்டும் முதல் வார இறுதியில் 75 கோடி வசூலை வசூலித்ததாகச் சொன்னார்கள்.
இப்போது ஒரு வாரத்தில் 150 கோடி வசூலித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட வெளிநாடுகளில் கூட படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாகச் சொன்னார்கள்.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் இரண்டு மாதங்களாக வராத மக்கள் 'மாஸ்டர்' படத்திற்காக விஜய்க்காகவே வந்தார்கள் என தியேட்டர்காரர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள். படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற விஜய்யின் முடிவுக்கு அவர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகிறார்கள்.