தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன-13ஆம் தேதி வெளியானது. ஆனால் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே மாஸ்டர் படத்தின் பல காட்சிகள் துண்டு துண்டாக இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவிலும் பரவின. இது மாஸ்டர் படக்குழுவினரையும் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் செயல்பட்டது தெரியவந்தது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்குப் ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் நிறுவனம் படத்தை மூலமாகவே அனுப்ப முடியும். அந்த சமயத்தில் தான் மாஸ்டர் படம் மொபைலில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது உறுதியானது. இதை தொடர்ந்து, அந்த தனியார் நிறுவனம் மற்றும் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் சட்டவிரோதமாக 'மாஸ்டர்' காட்சிகளைப் பதிவேற்றியதற்காக ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்..