பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
மலையாளத் திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்ததார். அவருக்கு 98 வயது ஆகிறது.
அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்க வைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளைய வந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்க வேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமலுக்கு தாத்தாவாக உன்னி கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.