5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் அஜ்மல், தற்போது தமிழில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் இவரது தம்பி அஸ்கர் அமீர் இயக்குனராக அறிமுகமாகும் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஜ்மல்.
“என்னுடைய தம்பி தான் என்றாலும், எப்படி டைரக்ட் பண்ணுவானோ என்கிற டென்சனுடன் தான் படப்பிடிப்புக்கு சென்றேன்.. ஆனால் ஒரு டைரக்டராக தன்னை அழகாக பொருத்திக் கொண்டு விட்டான். ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக, அதேசமயம் காட்சிக்கு என்ன தேவை என்பதை மட்டும் படமாக்கியதை கண்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன்.” என தம்பியின் டைரக்சன் பற்றி பெருமைப்படுகிறார் நடிகர் அஜ்மல்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு, குட்டிக்கணம், முண்டக்காயம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹாரர் கதை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார் அஜ்மல்.. மலைப்பகுதி ஒன்றுக்கு போட்டோகிராபர் ஒருவருடன் செல்லும் அஜ்மல், அங்கே சந்திக்கும் திகிலான அனுபவங்களும் அதன் பின்னணியில் அடங்கியுள்ள மர்மங்களும் தான் படத்தின் கதையாம்.