போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-, விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் ஓடிய தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் படம் வெளியான நாளில் இருந்தே படத்தின் வசூலை பற்றி எக்குதப்பான தகவல்கள் வருகின்றன. தற்போது வரை 200 கோடி வசூல் என சொல்லப்படுகிறது. சிலர் 300 கோடி என சமூகவலைதளங்களில் கிளப்பிவிட்டுள்ளனர்.
இப்படித்தான் முன்பு பிகில் படம் வெளியானபோதும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வசூல் செய்தியை வெளியிட்டு அந்நிறுவனத்தை ஐடி ரெய்டில் சிக்க வைத்தார்கள். அதேபோன்று தான் இப்போது மாஸ்டர் படத்தின் வசூலையும் தாறுமாறாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என ஒரு பக்கம் விமர்சனமும் வருகிறது
இப்படியான நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அப்பட வசூல் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''200 கோடி, 300 கோடி வசூல் என்று சொல்வதை என்னவென்றே புரியாமல் ரசிகர்கள் பரபரப்பாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எல்லாம் படத்தை விற்கப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு மேல் பணம் வந்தால் தான் அது லாபம் ஆகும் என்று கூறியுள்ள சேவியர் பிரிட்டோ, 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு இவ்வளவு வசூல் வந்தது எதிர்பாராத ஒன்று தான். அந்த வகையில், வைரஸ் தொற்று நேரத்தில் இந்த அளவுக்கு மாஸ்டர் வசூலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.