துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தாய்லாந்தில் பிறந்து ஹாலிவுட்டில் ஜெயித்த ஹீரோ டோனி ஜா. ஆங் பேக், டாம் யம் கூங் உள்ளிட்ட ஆக்ஷன் படங்கள் மூலம் உலக புகழ்பெற்றவர். இவரது படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக தமிழ் ரசிர்களை கவர்ந்தவர் இவர்.
ஹாலிவுட்டில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7வது பாகத்திலும், ட்ரிபிள் எக்ஸ் மூன்றாவது பாகத்திலும் டோனி ஜா நடித்திருந்தார். டோனிஜா அளித்த பேட்டி ஒன்றில் இந்துக்கள் வணங்கும் ஹனுமனை புகழ்ந்துள்ளார். அதோடு உலகின் முதல் சூப்பர் ஹீரோ ஹனுமன் தான் என்றும் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு இந்து கடவுள் ஹனுமனை பிடிக்கும். அவர் தான் உலகின் முதல் சூப்பர் ஹீரோ. நன்றிக்கும், விசுவாசத்துக்கும் எடுத்துக்காட்டான ஒரு கடவுள் அவர். ஹனுமன் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சிறப்பாக இருக்கும். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன். மேலும் டிசி அல்லது மார்வலின் சூப்பர் ஹீரோவாக நடிக்கவும் எனக்கு ஆசை. அதுதான் என் கனவு. ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளது. என் கனவு நனவானால் நன்றாக இருக்கும்'' என்கிறார்.
மான்ஸ்டர் ஹன்டர் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் டோனி ஜா நடித்துள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்தப் படம் 3டியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.