2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் இணையத் திரைப்படமான 'லைவ் டெலிகாஸ்ட்' டிரைலர் நேற்று வெளியானது. டிரைலரைப் பார்த்ததுமே ரசிகர்கள் 'காப்பி' என கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
'த கிளின்சிங் அவர்' என்ற 2019ம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் காப்பி என ஒரு பக்கமும், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 2' படத்தின் காப்பி என மற்றொரு பக்கமும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு சில வருடங்களுக்கு முன்பு இதே கதையுடன் ஒரு சிறிய பட்ஜெட் தமிழ்ப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.
இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக வெங்கட் பிரபு, “நான் அறிமுகமாக வேண்டுமென முதன் முதலில் எழுதிய கதைதான் 'லைவ் டெலிகாஸ்ட்'. பல்வேறு காரணங்களால் அதை என்னால் எடுக்க முடியவில்லை. ஆனால், அதையே இப்போது என்னுடைய முதல் சீரிஸ் ஆக எடுத்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.