போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த மாடல் ரைசா வில்சன். 2018ம் ஆண்டு வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது 'த சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி வரும் 'த சேஸ்' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். டிரைலரைப் பார்த்தால் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. படத்தில் ரைசா வில்சன் மிகவும் கிளாமராக வேறு நடித்திருப்பார் போலிருக்கிறது. கதாநாயகியாக தமிழில் வெளிவரும் இரண்டாவது படமே தனக்கான முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் போலிருக்கிறது.
“த சேஸ்' டிரைலரைப் பார்த்தவர்களுக்கும் லைக் செய்தவர்களுக்கும் சியர்ஸ்,” என சியர்ஸ் சொல்லியிருக்கிறார். அந்தப் பதிவிற்காக கையில் மதுக்கோப்பையுடன் வேறு போஸ் கொடுத்திருக்கிறார்.