ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மோகன்லால், மீனா நடித்த த்ரிஷயம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த முதல் சினிமாவாக அமைந்தது. தமிழ் உள்பட இந்திய மொழிகள் பலவற்றிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்தின் 2ம் பாகம் இப்போது தயாராகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஜீது ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இதை ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரம்பவூர் தயாரித்துள்ளார். மோகன்லாலுடன் மீனா, சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, அன்சிபா, எஸ்தர் மற்றும் சாய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ நேற்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வருகிற 8ந் தேதி வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் த்ரிஷ்யம் 2 ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தியேட்டர்களில் இன்னும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளிவருவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன.