துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நானும் ரவுடிதான் படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி- நயன்தாரா வைத்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இதில் நடிகை சமந்தாவும் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், “முதல் முறையாக எனது தங்கம் நயன்தாரா ஒருவருடன் ஜோடி சேர்வதை பார்த்து நான் பொறாமைபடவில்லை” என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு சமந்தா பற்றி நீங்கள் அருமையானவர், இந்த பார்ட்டியில் உங்களையும் இணைத்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் கூறுவதை பார்த்தால் இதுநாள் வரை அவர் மற்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததை கண்டு சற்று பொறாமையில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.