துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
30 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் நதியா. தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்து, ஆண் ரசிகர்களை மட்டுமல்ல பெண் ரசிகர்களையும் சம்பாதித்தவர். நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா வளையல் என அப்போது அவர் பெயரில் வியாபாரமும் அமோகமாக நடந்தது. இரண்டாது படத்திலேயே கவர்ச்சி களத்தில் குதித்த நடிகைகளுக்கு மத்தியில் கடைசி படம் வரை கவர்ச்சியாக நடிக்காமல் ரசிகர்களை கவர்ந்தார்.
50 வயதை கடந்துவிட்ட நதியா இந்த வயதிலும் இளமையை தக்க வைத்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் தலையில் தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் என கூலாக அமர்ந்திருக்கும் அவரின் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதை பார்த்துவிட்டு ஒரு சிலர் விமர்சித்தாலும் பலரும், வயசானாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு என கருத்து பதிவிட்டுள்ளனர்.