போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க எஸ்பி ஜனநாதன் இயக்கி வரும் படம் 'லாபம்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போது படப்பிடிப்பிலிருந்து திடீரென வெளியேறினார் ஸ்ருதிஹாசன்.
அப்படி அவர் வெளியேறும் போது படத்தின் இயக்குனரான ஜனநாதனிடம் கூட சொல்லாமல் வெளியேறியது இப்போது தெரிய வந்துள்ளது. அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ஜனநாதன்.
படத்தின் படப்பிடிப்பு அப்போது நடந்த போது திடீரென ரசிகர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடன் விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது கொரானோ தொற்று குறையாத நேரம். பாதுகாப்பு அம்சங்களுடன்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை அப்படி சந்தித்துப் பேசியது பிடிக்காமல் ஸ்ருதிஹாசன் வெளியேறி இருக்கிறார். அப்படி போகும் போது அவர் இயக்குனரிடம் கூட சொல்லவில்லையாம்.
ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில் இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் ஸ்ருதிஹாசனை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறார் இயக்குனர்.
அடுத்து ஸ்ருதிஹாசன் டப்பிங் பேச வருவாரா இல்லையா என்பது சந்தேகம்தான். அவருக்குப் பதிலாக வேறு யாராவது டப்பிங் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் ஸ்ருதிஹாசன் பங்கேற்க மாட்டார் என்றே தெரிகிறது.