சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த சில வருடங்களுக்கு முன் மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் மீனா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு, தெலுங்கிலும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-2 படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி முதல் பாகத்தை போன்றே வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தெலுங்கிலும் வெங்கடேஷ்-மீனா நடிப்பில் த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பு சுடச்சுட ஆரம்பித்து விட்டது. இந்தமுறை ஜீத்து ஜோசப்பே தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார். இந்த இரண்டாம் பாகத்தில் மலையாளத்தில் படம் முழுதும் வரும் புதிய ஐஜி கதாபாத்திரத்தில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் ராணாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். வெங்கடேஷும் ராணாவும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் ராணா ஒப்புக்கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.