தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாநாடு படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதுகுறித்து டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகையில், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. அப்போது எடுக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மாநாடு ரிலீஸ் தேதியை உறுதி செய்து அறிவித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.