இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியபோது, அவரது கணவரான சூர்யா அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படங்களை தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அதேபோல் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சாயிஷாவிற்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சாயிஷா, தற்போது டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருப்பவர், தெலுங்கு-, கன்னடத்தில் தயாராகி வரும் யுவரத்னா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது சாயிஷாவுக்கும் ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவைப் போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்கும் முடிவில் உள்ளார். இதற்காக சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ஆர்யா.