துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராய்லட்சுமி கதையின் நாயகியாக நடிக்கும் படம் சிண்ட்ரல்லா. சாக்ஷி அகர்வால் , ரோபோ சங்கர், கல்லூரி வினோத் , பாடகி உஜ்ஜயினி ,கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். காஞ்சனா 2 படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் லட்சுமி என்டிஆர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .
வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கான வழக்கமான பாணியில் இருந்து விலகி ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது . ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும். அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டதாக இருக்கும். நல்ல நடிப்பில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக இருக்கும் . என்றார்.