துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ்த திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய அவருடன் பணி புரியாத பல திரைக்கலைஞர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.
ஆனால், அவருடைய 'லாபம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே, தமிழ் சினிமா நடிகைகள் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிந்த திரைக்கலைஞர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் கூட எந்தவிதமான ஆறுதல் பதிவையும் பதிவிட மாட்டார்கள்.
சில சமயங்களில் சினிமாவில் கோலோச்சிய மூத்த கலைஞர்கள் மறைந்தால் கூட ஒரு இரங்கல் பதிவையும் பதிவிட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.
'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஸ்ருதிஹாசன் வெளியேறினார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜனநாதன் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார். ஒருவேளை அதை மனதில் வைத்துக் கொண்டு கூட ஸ்ருதிஹாசன் எந்தவிதமான ஆறுதல் பிரார்த்தனைப் பதிவையும் ஜனநாதனுக்காக பதிவிடாமல் இருக்கிறார் போலிருக்கிறது.