20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்தைத் தவிர வேறு எந்த ஒரு படத்திற்கும் மக்கள் வரவில்லை. மிக மிகக் குறைவான அளவில் தான் சில குறிப்பிட்ட படங்களைப் பார்த்தார்கள்.
இந்நிலையில் மக்கள் வராத காரணத்தால் நாளுக்கு நாள் பல தியேட்டர்களை மூடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிக்க சென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அவர்கள் தியேட்டர்கள் அமைந்துள்ள சென்னை - தி.நகர், மதுரவாயல், நாவலூர், வில்லிவாக்கம் ஆகிய தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகபட்சமாக 100 ரூபாயும், திண்பண்டங்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியையும் அறிவித்துள்ளார்கள்.
அப்படியான சலுகைகளைக் கொடுத்தாலாவது மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். ஒரு தியேட்டரில் இப்படி சலுகை கொடுக்க முடிகிறதென்றால் மற்ற தியேட்டர்களிலும் இப்படி ஒரு சலுகை அறிவிக்கலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
டிக்கெட் கட்டணங்களைக் கூட மக்கள் ஓரளவிற்கு தாங்கிக் கொள்வார்கள். ஆனால், வெளியில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பாப்கார்ன்களை தியேட்டர்களில் 100, 150, 200 என தியேட்டர்களுக்கு ஏற்றபடி விற்பதுதான் அவர்களை எரிச்சலடைய வைக்கிறது. மற்றும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம், படம் பார்க்கும் டிக்கெட் கட்டணத்தை விடவும் அதிகமாக இருக்கும்.
ஒரு பக்கம் கொரோனா பயம், மறுபக்கம் ஓடிடியில் வந்த தாக்கம், இவற்றைச் சமாளிக்க தற்போது சலுகைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதை நிரந்தரமாக்கினால் மட்டும் தான் மக்களை மீண்டும் அதிக அளவில் தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும் என சிலர் கருதுகிறார்கள். அதற்கு அனைத்து சங்கங்களும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவு காண வேண்டும் என திரையுலகத்தில் உள்ளவர்களே வலியுறுத்துகிறார்கள்.