பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'அசுரன்'. இப்படத்தை தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடிக்க 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.
படத்திற்கு மணிசர்மா இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது திடீரென படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் தனக்கு முழு சுதந்திரம் அளிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தின் நாயகன் வெங்கடேஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'நரப்பா' படத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டார்கள். அதற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த 'அசுரன்' படத்தின் இசையையே பயன்படுத்தினார்கள். அப்போது முதலே படக்குழுவினருக்கும் மணிசர்மாவுக்கும் மோதல் இருந்து வந்ததாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
மே 14ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கனெவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் வேறு ஒரு இசையமைப்பாளரை வைத்து பணிகளைத் துவங்குவார்கள் எனத் தெரிகிறது. இதனால், வெளியீட்டுத் தேதி தாமதமாகுமா அல்லது அதே தேதியில் வெளியிடுவார்களா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.