ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு வரை அதிரடி இசையமைப்பாளராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் மணிசர்மா. தமிழில் விஜய், அர்ஜுன் ஆகியோரின் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்த மணிசர்மா சமீபகாலமாக இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக கடந்த 2022ல் பத்து படங்களுக்கு இசையமைத்த மணிசர்மா கடந்த வருடம் ஒரே ஒரு படத்திற்கு மட்டும் அதுவும் அவ்வளவு பிரபலமில்லாத ஒரு ஹீரோவின் படத்திற்கு மட்டுமே இசையமைத்துள்ளார் என்பது ஆச்சரியம் கலந்த சோகம்.
இந்த வருடத்தில் பூரி ஜெகன்நாத்தின் ‛ஐ ஸ்மார்ட் ஷங்கர்' மற்றும் விஷ்ணு மஞ்சுவின் ‛கண்ணப்பா' என இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார் மணிசர்மா. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தமன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தை தேடியே செல்கின்றனர் அவர்களுக்கு இரண்டு படங்கள் கொடுத்தால் எனக்கு ஒரு பட வாய்ப்பாவது கொடுக்கலாம் அல்லவா'' என்று மனம் விட்டு கேட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் சிலர் காப்பி சர்ச்சையில் சிக்குவது குறித்தும் அப்படி அவர் ஏதாவது பாடல்களை காப்பி அடித்திருக்கிறாரா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மணி சர்மா, “2002ல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‛ஆதி' திரைப்படத்தில் ‛சிக்கி சிக்கி' என்கிற பாடலை வேறு மொழி படத்தில் இருந்து அப்படியே காப்பி அடித்து பயன்படுத்துமாறு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பட வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இன்றி என் மனதிற்கு பிடிக்காமலேயே அதை செய்தேன். எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் தன்னுடைய தனித்துவமான இசையை கொடுக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும்” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.