கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் | ஹீரோயின் ஆனார் சேஷ்விதா கனிமொழி | 37 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் மாலாஸ்ரீ மகள் | பிளாஷ்பேக் : டைட்டில் கார்டு நடைமுறையை மாற்றிய படம் | நவம்பர் மாதத்தில் ராஜமவுலி, மகேஷ்பாபு பட அப்டேட் | புதுப்பட டிரைலர் போல வெளியான 'கேப்டன் பிரபாகரன்' டிரைலர் | சூரி கிராமத்திற்குச் சென்று அன்பில் நெகிழ்ந்த ஐஸ்வர்ய லெட்சுமி | நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் 'சிவா' ரீ-ரிலீஸ் |
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இன்றைக்கு மக்களிடம் விருப்ப நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி. பல மொழிகளில் ரீமேக் ஆகவும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ரா மலையாள படத்தில் ஹீரோயின் ஆகிவிட்டார். விரைவில் தமிழில் நடிக்க இருக்கிறார். ஷிவாங்கியும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அடுத்து புகழ்.
அஜித் நடிக்கும் வலிமை படமே புகழுக்கு முதல் படமாக அமைந்தது சின்னத்திரையுலகையே ஆச்சார்யப்பட வைத்தது. அடுத்து அருண் விஜய் நடிக்க ஹரி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் 46வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை பொன்ராம் இயக்குகிறார். முதல் படம் வெளிவருதற்கு முன்பே மேலும் 2 பெரிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் புகழ்.
தற்போது முன்னணியில் இருக்கும் யோகி பாபுவும் விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வந்தவர் தான். அவரைப்போன்ற சாயல் சுருள்முடி என புகழும் இருக்கிறார். விரைவில் யோகி பாபு போல் இவரும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பு உள்ளது.