மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு |

அருண் விஜய்யின் 33ஆவது படத்தை தற்போது இயக்கி வருகிறார் ஹரி. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பழனி அருகில் உள்ள நெய்க்காரப்பட்டியில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் இயக்குனர் ஹரி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இருப்பினும், அப்படக்குழுவில் இருந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அருண் விஜய் 33 படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.