திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மூச்சுதிணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்த கார்த்திக், அரசியல் என பாதை மாறியதால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது, ‛தீ இவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் மனித உரிமை காக்கும் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக ., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார். கட்சி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‛நெகட்டிவ்' என ரிசல்ட் வந்துள்ளது.