வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தற்போது திரைப்பட பாடல்களை போலவே தனி ஆல்பங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொலவெறி, ரவுடிபேபி, வாத்தி கமிங் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு முதன் முறையாக ஒரு இசை ஆல்பத்திற்கு கிடைத்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் அவரது மகள் தீ பாடியுள்ள என்ஜாய் என்சாமி ஆல்பம்தான் அது. குக்கூ...குக்கூ... என்று தொடங்கும் இந்தப் பாடல் ஆதி தமிழர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இது யு டியூப்பில் வெளியிடப்பட்டது. தற்போது வரை 47 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. எங்கு பார்த்தாலும் இந்த பாடல் ஒலிக்க துவங்கி விட்டது.
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சின்னத்திரை நடிகைகள் மைனா, ஆலியா மானசா இந்த பாடலுக்கு நடனமாடிய நிலையில், தற்போது நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.