ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு ஜூன் மாதமே தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தாமதமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரியில் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக நடிகர் ஆரி தேர்வானார்.
இந்தாண்டு வழக்கம் போல் பிக்பாஸ் சீசன் 5 ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும் எனத் தெரிகிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே வழக்கம்போல் பலரது பெயர்கள் இப்போதே பிக்பாஸ் போட்டியாளர்கள் என சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கி விட்டது. அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 5ல் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானும் ஒரு போட்டியாளராகக் கலந்து கொள்வார் என்றும், அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வைரலாகியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய மன்சூர் அலிகான், தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தார். இதனாலேயே அவர் கடந்த சீசனில் போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஒவ்வொரு சீசனிலும் ஒரு பாடகர் போட்டியாளராக இருந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இந்த சீசனில் பாடகர் அந்தோணி தாசனும் ஒரு போட்டியாளராக களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல்கள் உண்மைதானா அல்லது வழக்கம் போல் வதந்தியா என்பது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்ப நாளன்றுதான் தெரிய வரும்.