தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

‛துப்பாக்கி, எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் தங்கை வேடங்களில் நடித்தவர் சஞ்சனா சாரதி. தற்போது “நினைவோ ஒரு பறவை” படத்தில் நாயகியாக நடிக்கிறார். அடுத்து தெலுங்கில் நவீன் சந்திரா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இதுப்பற்றி, ‛‛பெரும்பாலும் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகி நாயகி வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இப்போது நாயகி வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தெலுங்கில் எனக்கு இது முதல் படம். நகைச்சுவை, காதல் உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது'' என்கிறார் சஞ்சனா சாரதி .