‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
கார்த்தி - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், ‛‛கொரோனா லாக்டவுன் காரணமாக சுல்தான் படத்தை ஓடிடி தளத்தில்தான் வெளியிட முடிவு செய்து வந்தோம். அந்த சமயத்தில் தான் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.
அதன்பிறகுதான் சுல்தான் படத்தை தியேட்டரில் வெளியிட்டாலும் மாஸ்டர் படத்தைப்போலவே வசூவலிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மாற்றிக்கொண்டோம். அந்த வகையில் சுல்தான் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்கிற உறுதியை எங்களுக்கு ஏற்படுத்தியதே விஜய்யின் மாஸ்டர் படம்தான் என்றார் எஸ்.ஆர்.பிரபு.