கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? | விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? |
கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட காரணத்தால் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகின. ஓடிடி தளங்களில் படங்களைப் பார்க்க வருட சந்தா கட்டி உறுப்பினராக வேண்டும்.
ஆனால் டிவிக்களில் படம் பார்க்கத் தனியாகப் பணம் கட்ட வேண்டாம். ஏற்கெனவே வைத்திருக்கும் கேபிள் டிவி வசதியே போதும். ஓடிடிக்குப் போட்டியாக போகிற போக்கில் டிவிக்களிலேயே நேரடியாக புதிய படங்களை வெளியிட ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது.
'நாங்க ரொம்ப பிஸி, புலிக்குத்தி பாண்டி, ஏலே' படங்களின் வரிசையில் அடுத்து யோகி பாபு நடித்துள்ள 'மண்டேலா' படமும் நேரடியாக டிவியில் வெளியாக உள்ளது.
அடுத்த வாரம் ஏப்ரல் 4ம் தேதி விஜய் டிவியில் 'மண்டேலா' படத்தை நேரடியாக வெளியிடுகிறார்கள். இன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு அதனுடன் டிவி வெளியீட்டைப் பற்றியும் அறிவித்துள்ளார்கள்.
இப்படத்தைத் தயாரித்த நிறுவனம் தான் ஏற்கெனவே 'ஏலே' படத்தை டிவியில் நேரடியாக வெளியிட்டது. தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்தடுத்து இரண்டு படங்களை டிவியில் நேரடியாக வெளியிடுவதால் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.