ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
2011ல் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார் ஜனனி அய்யர், மது ஷாலினி உள்பட பலர் நடித்த படம் ‛அவன் இவன். இப்படம் வெளியானபோது சிங்கம்பட்டி ஜமீனை தரக்குறைவாக விமர்சனம் செய்து படமாக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அதையடுத்து சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் என்பவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக பாலா, ஆர்யாவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் குறித்த நாளில் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து தான் படப்பிடிப்பில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை என்று ஆர்யா தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில்,நேற்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்யாவிடம் மன்னிப்பு கேட்டால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று ஜமீன் தரப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் ஆர்யா. அதையடுத்து ஆர்யா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிங்கம்பட்டி ஜமீனை ஒரு காமெடியனைப் போன்று சித்தரித்திருந்ததால் டைரக்டர் பாலா மீதான வழக்கை வாபஸ் பெறமாட்டோம் என்று ஜமீன் தரப்பு கூறிவிட்டது. அதனால் பாலா மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.