அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் |
ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான திலீப்குமார் மற்றும் சாய்ரா பானுவின் உறவினரான சாயிஷா, தமிழில் 2017ல் வெளியான 'வனமகன்' என்ற படம் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கில் 'அகில்' படம் மூலமும், ஹிந்தியில் 'ஷிவாய்' படம் மூலமும் அறிமுகமானார். தமிழில் 'வனமகன்' படத்திற்குப் பின் 'கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட சாயிஷா, கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்துள்ள 'யுவரத்னா' படம் நாளை(ஏப்., 1) வெளியாக உள்ளது. இப்படம் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகிறார் சாயிஷா.
அந்த மகிழ்ச்சியை நடனமாடி வெளியிட்டுள்ளார். “நாளை வெளியாக உள்ள 'யுவரத்னா' படத்தின் வெளியீட்டிற்காக நான் இப்படித்தான் உற்சாகமாக உள்ளேன். உங்களது இதயங்களிலும் நான் நடனமாட முடியும் என நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ், ஆகியவற்றைத் தொடர்ந்து கன்னடத்திலும் தடம் பதிக்கிறார் சாயிஷா.