கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரானோ பாதிப்பும் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் தங்களது 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். அடுத்து ஹிந்தியிலும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
லைக்கா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் படத்திற்காக போடப்பட்டட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும் பாக்கியாக உள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்,” என்றும் கேட்கப்பட்டதாம்.
ஆனால், ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.