சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் படங்களும் தயாரித்தார். இதற்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் கடன் பெற்று இருந்தார். ஆனால் அதை அவர் செலுத்தவில்லை. மாறாக அன்புச் செழியனிடம் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அதற்கு பதிலாக கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி நடக்காமல் விஷால் தனது ‛வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிட்டார். இதனால் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு விவாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு விஷால் செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடி தொகையை 30 சதவீதம் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.